மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. நள்ளிரவு 1 மணி வரை...மது கிடைக்கும்.. அரசு அதிரடி அறிவிப்பு

By Raghupati RFirst Published Dec 29, 2021, 7:02 AM IST
Highlights

வரும் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்யலாம் என்று அறிவித்து இருக்கிறது அரசு.

 

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்தது.இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள், பல்வேறு உத்தரவுகளை விதித்து வருகிறது. 

புதுச்சேரி அரசு தற்போது புத்தாண்டை ஒட்டி பல்வேறு விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. பிற மதுக்கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

click me!