
Gold Rate Today: தங்கம் விலையானது கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று சற்றே குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ.264 குறைந்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றம் காரணமாக , தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் , சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ 4,847 க்கும் ஒரு சவரன் ரூ38, 776 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.0.40 உயர்ந்து ரூ.72.50 - க்கு விற்பனையாகிறது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம் - 4,847
1 சவரன் தங்கம் - 38,776
1 கிராம் வெள்ளி - 72.50
1 கிலோ வெள்ளி - 72,500
புதன்கிழமை விலை ரூபாயில் ( ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம் - 4,880
1 சவரன் தங்கம் - 39,040
1 கிராம் வெள்ளி - 72.10
1 கிலோ வெள்ளி - 72,100