Weather Update: 130 ஆண்டு கால வரலாற்றை மாற்றிய வானிலை.. மார்ச் மாதத்தில் கனமழை..! முழு விவரம்..

Published : Mar 03, 2022, 06:31 PM IST
Weather Update: 130 ஆண்டு கால வரலாற்றை மாற்றிய வானிலை.. மார்ச் மாதத்தில் கனமழை..! முழு விவரம்..

சுருக்கம்

 Weather Update: கடந்த 130 ஆண்டு வானிலை வரலாற்றின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் உருவாகி, தமிழ்நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மார்ச் மாதத்தில் 1938ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையும், 1994 ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியது, இது வரை இருக்கக்கூடிய வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்றும் தென்மண்டல தலைபர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிகனமழைக கன வாய்ப்பு இல்லை ஆனால் வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதுவரை மார்ச் மாதத்தில் 5 புயல்களும் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்கக் கடலில் உருவாகி உள்ளது என்றார்.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.இது அடுத்த24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். 

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்

நாளை கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் [தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை] புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5ம் தேதி கடலோர தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

6ம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

7ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!