Gold Rate Today | மீண்டும் உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

By Ganesh RamachandranFirst Published Nov 17, 2021, 10:36 AM IST
Highlights

Gold Rate Today | தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்திலேயே உள்ளது. உரண்டு நாட்களுக்கு முன்பு சற்று குறையத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தங்கத்தின் விலை நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்த தங்கம் விலை இரண்டு நாட்கள் முன்பாக சற்று ஆறுதலளித்தது. இனி கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கவைத்து நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது தங்கம் விலை. ஒரு கிராம் தங்கத்தின் இன்றைய விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வர்த்தக நெருக்கடிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீடுகளை பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் ஆகியவற்றிலிருந்து மாற்றத் தொடங்கியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைத்து காலகட்டத்துக்குமான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது. சர்வதேச அளவிலும் கொரோனாவுக்குப் பிறகு வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதைலீடு அதிகரித்துள்ளது. இந்தக் காரணங்களால் தான் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்றைய தங்கம் விலை, ஒரு கிராம் தங்கம் (22 காரட்) நேற்றைய விலையான 4,650 ரூபாயுடன் ஒப்பிடும்போது, 1 ரூபாய் உயர்ந்து 4,651 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்) 8 ரூபாய் உயர்ந்து 37,201 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் 1 ரூபாய் உயர்ந்து 5,074 ரூபாயாகவும், ஒரு சவரன் 8 ரூபாய் உயர்ந்து 40,592 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையிலும் இன்று சிறிது குறைந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 50 பைசா குறைந்து 71 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து ரூபாய் 71,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

click me!