தங்க மாரியப்பன் மிரட்டிய இளைஞர் மர்ம மரணம்….கொலையா ? தற்கொலையா ? அதிர்ச்சி தகவல்….

 
Published : Jun 05, 2017, 08:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
தங்க மாரியப்பன் மிரட்டிய இளைஞர் மர்ம மரணம்….கொலையா ? தற்கொலையா ? அதிர்ச்சி தகவல்….

சுருக்கம்

Gold medal mariappan

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனது காரின் மீது மோதிய இளைஞர் ஒருவரை ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனும் அவரது நண்பர்களும் மிரட்டியுள்ளனர். தற்போது அந்த இளைஞர் ரயில்வே டிராக் அருகே பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்.

இதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மூர்த்தி என்பவரது மகள் சதீஸ்குமார், நேற்று மதியம் பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மண் சறுக்கியதில் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த  மாரியப்பனின் கார் மீது விழுந்துள்ளார்.

இதில், காரின் பின்பக்க கதவு பகுதியில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாரியப்பன், அவரது நண்பர் யுவராஜ் மற்றும் சிலர் சதீஸ்குமார் வீட்டிற்கே சென்று, தனது புதிய காரை சேதப்படுத்திவிட்டதாக கூறி மிரட்டிதாக சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், சதீஸ்குமாரின் தாய் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டிய மாரியப்பனின் நண்பர் யுவராஜ் அவரின் செல்போனை பிடுங்கி சென்று விட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இளைஞர் சதீஸ்குமார் அங்குள்ள ரயில்வே ட்ராக் ஓரமாக உள்ள புதரில் பிணமாக கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சதீஸ்குமாரின் குடும்பத்தினர், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தீவட்டிப்பட்டி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

தங்க மாரியப்பனும் அவரது நண்பர்களும் மிரட்டியதால் சதீஸ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாராவது கொலை செய்துள்ளனரா ? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!