தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயந்து நடுங்கி மாணவ, மாணவிகள் தெறித்து ஓடும் காலம் மாறிப்போய் தற்போது மாணவர்களுக்கு பயந்து பாடம் நடத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் அடிக்கும் போது அல்லது கண்டிக்கும் போது மாணவர்கள் விபரீத முடிவை தேடி கொள்ளும் நிலை தொடர்ந்ததால் மாணவர்களை இனி அடிக்கக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி அதிரடி காட்டியது. இதிலிருந்தது தான் ஆசிரியர்களுக்கு கேட்ட நேரம் தொடங்கியது.
மாணவிகளின் மடியில் மாணவர்கள் படுத்து உறங்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயந்து நடுங்கி மாணவ, மாணவிகள் தெறித்து ஓடும் காலம் மாறிப்போய் தற்போது மாணவர்களுக்கு பயந்து பாடம் நடத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் அடிக்கும் போது அல்லது கண்டிக்கும் போது மாணவர்கள் விபரீத முடிவை தேடி கொள்ளும் நிலை தொடர்ந்ததால் மாணவர்களை இனி அடிக்கக்கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி அதிரடி காட்டியது. இதிலிருந்தது தான் ஆசிரியர்களுக்கு கேட்ட நேரம் தொடங்கியது.
undefined
இதனிடையே, 2 வருட பள்ளி நேரடி வகுப்பு தடைபட்டதால் மாணவர்களின் பழக்க வழக்கமும் டோட்டலாக மாறிவிட்டது. இந்நிலையில், கடந்த மாதம் அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டனர். ஆசிரியர்களையும் எதிர்த்து பேசினர். மேலும் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஒரு குழுவாக எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட சம்பவம் நடந்தது. தலை முடியை ஒழுங்காக வெட்டி வா என்று ஆசிரியர், மாணவர்களை அறிவுறுத்தலினால் அவரை அடிக்க பாய்வது போன்ற செயல்கள் மாணவர் சமுதாயம் தடம் மாறி செல்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க வகுப்பறையிலேயே மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பதும் போன்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த வீடியோவில் மதிய உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் பல மாணவர்கள் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடும்போது ஒரு சில மாணவர்கள் மாணவிகளின் மடியில் தலை வைத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.