Fire accident in GH Hospital: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. அலறிய நோயாளிகள்..!

Published : Apr 27, 2022, 12:09 PM ISTUpdated : Apr 27, 2022, 12:11 PM IST
 Fire accident in GH Hospital: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. அலறிய நோயாளிகள்..!

சுருக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

ஆசியாவில் மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படுவது சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர். 

தீ விபத்து

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததனர். இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

விசாரணை

விசாரணையில், தீப்பற்றி எரிந்த குடோன் ஆக்சிஜன் சிலிண்டர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வைக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், விபத்திற்கு காரணம் மின் கசிவு காரணமா அல்லது  ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!