
திமுகவின் பேச்சாற்றல் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று சொல்வார்கள் , அதை நிருபிக்கும் வண்ணம் மு.க.ஸ்டாலின் முன்பு ஜெயலலிதா போல் ஒற்றை விரலை உயர்த்தி அசத்தலாக பேசிய சிறுமி அனைவரையும் கவர்ந்தார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதிய் 94 வது பிறந்தநாள் கூட்டம் படப்பை அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான திரண்டிருந்த பேசிய 5 வயது சிறுமி, அனைவரும் பாராட்டும்படி அடுத்த பினாமிஆட்சி ஒழிந்து அடுத்து முதல்வராக ஸ்டாலின் வரும் நாளை அனைவரும் எதிர்பார்க்கிறோம் என்று பேசி அசத்தினார்.
திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த போது, அதன் மொத்த சொத்துக்களே பேச்சாற்றல் மிகுந்த தலைவர்கள்தான். ஐம்பெரும் தலைவர்கள் என்றழைக்ப்பட்ட அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத் உள்ளிட்டோரை அடுத்து இடத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கண்ணதாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களுடைய சொல்லாற்றலால் தமிழகத்தை 68 ஆண்டுகளாக கட்டிப்போட்டுள்ளனர்.
அடுக்குமொழி பேச்சுகள், அறிவார்ந்த பேச்சுகள், எதுகைமோனை பேச்சுகள் என திமுக தலைவர்களின் சொல்லாற்றலை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரசார் திணறினர். அறிவார்ந்த கருத்துக்களின் கூடமாக திமுகவும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி போட்டு வந்தன. தங்களது தொண்டர்களை படிப்பகம் மூலம் தயார் படுத்தினர்.
கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் சி.பி.சிற்றரசு , விடுதலை விரும்பி , கே.ஏ.மதியழகன் , வைகோ என அடுத்த கட்ட தலைவர்கள் வளம் வந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியே அரசியல் அறிவை ஊட்டினார். ஆனால் 1970 களுக்கு பிறகு இது படிப்படியாக மாறி சினிமா சார்ந்த அரசியலாகவும் , வசதி படைத்தவர்கள் , அரசியலே அறியாதவர்களும் திமுக , அதிமுகவில் அதிகம் ஆதிக்கம் பெற துவங்கினர்.
ஆனாலும் திமுக என்ற இயக்கத்தின் சமூக பணி தமிழகத்தில் மறுக்க முடியாத ஒன்று . திமுகவில் அவ்வப்போது இளைய தலைவர்கள் தோன்றி நம்பிக்கையை விதைத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.
அதை நிருபிக்கும் வகையில் நேற்று படப்பை அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் நடந்த கூட்டத்தில் 5 வயது சிறுமி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்த கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் முன்பு அசத்தலாக பேசி கைதட்டல் வாங்கினார்.
திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது அழிக்க நினைக்க யாரும் அழிந்து போவது நிச்சயமே. பினாமி ஆட்சி ஒழிந்து நம்முடைய செயல் தலைவர் அரியணை ஏறுவது நிச்சயமே என பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இருந்த கூட்டத்தில் அச்சமின்றி பேசிய சிறுமி கைதட்டல் வாங்கினார்.