உடலில் காயங்களுடன் தூக்கு... இளம்பெண் மர்ம மரணம்....

 
Published : Jul 15, 2017, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
உடலில் காயங்களுடன் தூக்கு...  இளம்பெண் மர்ம மரணம்....

சுருக்கம்

girl mysterious death in chennai

கொரட்டூரில், வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, கொரட்டூர், பெருமாள் கோயிலைச் சேர்ந்தவர் இளம் பெண் பூர்ணிமா. இவர், அங்குள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

பூர்ணிமா நேற்று பகலில் வீட்டில் தனியாக இருந்தபோது, உடலில் காயங்களுடன் தூக்கிலிடப்பட்ட நிலையில் இருப்பதாக அருகில் இருந்தோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பூர்ணிமா கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!