
வேலூர்
எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தேக்க நிலை ஊதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும்.
எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
வெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதன்படி வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் பி.சந்திரசேகரன் வரவேற்றார். இதில் மாவட்டச் செயலாளர் மணி, துணைத் தலைவர் உயிர்நாதன், இணைச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.