“புறநகர் பகுதிக்கு வரமுடியாதுப்பா…” 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுமி பலி – 7 வது மாடியில் இருந்து விழுந்து விபத்து

First Published Oct 29, 2016, 2:33 AM IST
Highlights


சென்னை பள்ளிக்கரணையில் 7வது மாடியில் இருந்து விழுந்து பள்ளி மாணவி இறந்தாள். ஆம்புலன்ஸ் வராமல் போனதால், காப்பாற்ற முடியாமல் போனதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரில் உள்ள 8 மாடி குடியிருப்பில் வசிப்பவர் நேரு. தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் நதியா (15). சென்னை நந்தனத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து நதியா வீடு திரும்பினா. இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு முடித்து, டிவி பார்த்து கொண்டிருந்தனர். சுமார் 9 மணியளவில் நதியா, வீட்டின் பால்கனி பகுதிக்கு வந்தார். திடீரென அவர் மடியில் இருந்து கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த நதியாவை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள், உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி நேரு, மீண்டும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆனால், நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து ஆட்டோ மூலம் சிறுமியை, சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நதியா, பரிதாபமாக இறந்தாள்.

புகாரின்படி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக அரசு, ஏழை மக்களின் பயன்பாட்டுக்காக 108 ஆம்புலன்ஸ் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்த துறையில் உள்ள ஊழியர்கள், மக்கள் பணியை சரிவர செய்வதில்லை. குறிப்பாக தென் சென்னையில் உள்ள மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, குரோம்பேட்டை உள்பட பல பகுதிகளுக்கு அவசரம் என போன் செய்தால், 108 ஆம்புலன்ஸ் வருவது கிடையாது.

நேற்று இரவு சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்தவுடன், ஆம்புலன்சுக்கு போன் செய்தோம். ஒரு மணி நேரத்துக்கு மேலாக வரவில்லை. இதையடுத்து நாங்களே ஆட்டோவில், தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினார்கள். மீண்டும் ஆம்புலன்சுக்கு போன் செய்தபோது, “புறநகர் பகுதிக்கு எல்லாம் வரமுடியாப்பா” முடியாது என திட்டவட்ட கூறிவிட்டனர்.

அவர்கள் உரிய நேரத்தில் வந்து இருந்தால், சிறுமிக்கு சிறிய காயங்களுடன் கா

click me!