
திருவண்ணாமலையில் 4 கல்வி மாவட்டங்களில் இருந்து வேலூர் மண்டல விளையாட்டுப் போட்டிக்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வேலூர் மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 17 முதல் 19 வயதுக்கு உள்பட்ட வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மணி, திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன், மாவட்ட கையுந்துபந்து பயிற்சியாளர் முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கைப்பந்து, கையுந்துபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவர்.