
கணவனை ஏமாற்றிவிட்டு காதலனுடன் சென்ற பெண் காதலானாலயே பிச்சை எடுத்ததுடன் தன் குழந்தையை பறிகொடுத்த அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்தவர் பிரியா. இவர் வேலூரில் பியூட்டிசியனாக வேலை பார்த்து வந்தவர். அப்போது மல்லன் என்ற வாலிபரை அவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதையறிந்த பிரியா வீட்டினர் மல்லனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று அவருக்கு சுரேஷ் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். சுரேஷ் - பிரியா திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்த நிலையில் பிரியா மல்லனை மீண்டும் சந்தித்துள்ளார்.
அப்போது இருவரும் மீண்டும் பேசி பழக ஆரம்பித்துள்ளனர். இதைதொடர்ந்து இருவரும் எங்கேயாவது செல்லலாம் என்று முடிவெடுத்து 10 மாத குழந்தையுடன் பிரியாவை அழைத்துள்ளார் மல்லன்.
பிரியாவும் சம்மதம் தெரிவிக்க மல்லன் அவரை அழைத்து கொண்டு குழந்தையுடன் தலைமறைவாகினர்.
இந்நிலையில், தனக்கு வேலை இல்லாததால் தன்னை சித்ரவதை செய்த காதலன் மல்லன், தன்னையும் தன் குழந்தையையும் கோவில் கோவிலாக பிச்சை எடுக்க வைத்ததாகவும், தன் குழந்தையை விலைக்கு விற்று விட்டதாகவும் பிரியா காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
கணவனை ஏமாற்றிவிட்டு காதலனுடன் சென்ற பெண் காதலானாலயே தன் குழந்தையை பறிகொடுத்த அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.