
மாமல்லபுரம் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், இந்த பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் நாள் கணக்கில் தங்கி அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்க்கின்றனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன், கேரள போலீஸ் டிஜிபியின் மகள், தனது கல்லூரி நண்பர்கள், தோழிகளுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். சுளேரிகாடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அனைவரும் தங்கினர்.
அப்போது, அந்த டிஜிபியின் மகள், மர்மநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, சமூக விரோத செயல்களை தடுத்தனர். பின்னர், போலீசாரின் பணி மந்தமாகிவிட்டது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் இருந்து ஜெனி (35) என்ற இளம்பெண் உள்பட 3 குடும்பத்தினர் கொண்ட 15 பேர் கொண்ட குழுவினர், கடந்த 10 நாட்களுக்கு முன், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளாக வந்தனர்.
மேற்கண்ட அதே சூளேரி காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர். கடந்த 10 நாட்களாக தங்கிய அவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம், முட்டுக்காடு உள்பட பல பகுதிகளை பார்த்து ரசித்து வந்தனர்.
நேற்று காலை ஜெனி, சூரிய குளியளுக்காக கடற்கரையோரம் நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த 2 பேர், அவரது வாயை பொத்தி, ஆளில்லாத இடத்துக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதையடுத்து விடுதிக்கு திரும்பிய ஜெனி, சம்பவம் குறித்து தன்னுடன் வந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
ஜெனி, போலீசில் கொடுத்த புகாரில் கூறுகையில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் இந்தியர்கள். மது அருந்தி போதையில் இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், டிஐஜி நஜ்மல் ஹோடா, எஸ்பி சந்தோஷ் அதிமானி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜெனிக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், ஜெனி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மேலும், மர்மநபர்கள் அணுறையை பயன்படுத்தி, சமூக விரோத செயலில் ஈடுபட்டதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்., இது தொடர்பாக, ஜெனி குடும்பத்தினர் ஜெர்மனி தூதரகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள், இன்று மாமல்லபுரம் செல்ல உள்ளனர்.