
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாதம் தோறும் முதல் தேதியில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி இன்று நவம்பர் 1ம் தேதி என்பதால் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலையின் படி தலைநகர் சென்னையில் ஒரு வணி பயன்பாடு கொண்ட சிலிண்டர் விலை 2133 ஆக இப்போது இருக்கிறது.
டெல்லியில் இதன் விலை 2000 ஆயிரத்து 50 ஆயிரம் ஆகும். கடந்த முறை இதன் விலை 1734 என்ற அளவில் இருந்தது. வர்த்தக நகரமான மும்பையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 1950 ரூபாயாக இருக்கிறது. கொல்கத்தாவில ரூ. 2073.50 ஆக உள்ளது.
வணிக பயன்பாடு கொண்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது, வணிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாதம்தோறும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தும் நடைமுறையானது பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
மார்ச் மாதம் 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 17ம் தேதி சமையல் எரிவாயு 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. சென்னையிலும் விலை உயர்த்தப்பட்டது. 875 ரூபாய் 50 காசுகள் என்று இருந்த கேஸ் சிலிண்டர் 900 ரூபாயாக சென்னையில் உள்ளது.
கடந்த சில மாதங்களில் விலை ஏற்றம் அதிகளவு உயர்ந்திருக்கிறது. வணிக பயன்பாடு கொண்ட சிலிண்டர்கள் விலை உயர்வால் வியாபாரிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா என்று நெருக்கடியால் ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன.
இப்படிப்பட்ட தருணத்தில் ஒரேடியாக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது பெரும் நெருக்கடிக்கு தங்களை கொண்டுபோய்விட்டு இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு முன் இல்லாத அளவு ஓராண்டில் மட்டும் இப்படி விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் செலவினம் அதிகரிப்பதாக கூறுகின்றனர்.
செலவினத்தை ஈடுகட்டும் வகையில் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தக் கூடிய சூழல் வரலாம் என்று வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஓட்டல்கள் மட்டும் அல்லது டீக்கடைகள், பேக்கரி உரிமையாளர்களும் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்துக்கு கடும் அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளனர்.
பெட்ரோல், டீசல் 100 ரூபாயை கடந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்களின் வரவும் சற்றே குறைய ஆரம்பித்துள்ளது, இப்படி இருக்கும் தருணத்தில் விலையேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர்கள் கூறி உள்ளனர்.
அதே நேரத்தில் இப்போது தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இனிப்பு,காரம் போன்ற பண்டங்கள் அதிகம் செய்யக்கூடிய தருணத்தில் விலையேற்றம் இந்த பொருட்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும்.
தீபாவளி நேரத்தில் கிடைக்கும் வர்த்தக வழக்கமாக பல மாதங்கள் கட்டுப்படியாகும் வகையில் இருக்கும். ஆனால் இப்போதோ பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனுடன் கேஸ் சிலிண்டர் விலையும் வர்த்தகத்தை நிச்சயமாக அதல பாதாளத்தில் கொண்டு போய்விட்டு விடும் என்று அபாய ஒலி எழுப்புகின்றனர் விஷயம் அறிந்த வியாபாரிகள்.