பெட்ரோல் - டீசலைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிப்பு...!

 
Published : Jun 01, 2018, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
பெட்ரோல் - டீசலைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிப்பு...!

சுருக்கம்

Gas cylinder price hike following petrol-diesel hike

பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மானிய கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதாவது மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை நாளுக்குநாள் உயா்ந்து வருகிறது. 

கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல், விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. பெட்ரோல் - டீசல் விலையேற்றம் குறித்து  மத்திய அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடந்த 16 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை அதிர்த்துள்ள நிலையில், அடுத்ததாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

அதாவது மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் தற்போது ரூ.481.84 ஆக மானிய சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.493.55 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.496.65 ஆகவும், மும்பையில் ரூ.491.31 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!