வேகமெடுக்கும் கஜா புயல்... இன்னைக்கு நைட்டு செம மழை... வானிலை மையம் எச்சரிக்கையால் பீதி!

By vinoth kumarFirst Published Nov 14, 2018, 3:50 PM IST
Highlights

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் இன்று காலை மையம் கொண்டு இருந்தது. நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது, அதன் வேகம், தற்போது 10 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் இன்று காலை மையம் கொண்டு இருந்தது. நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும், கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது, அதன் வேகம், தற்போது 10 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.  

கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கஜா புயல் நகர்வு இன்று பகலில் வேகம் அதிகரித்துள்ளது. இரவுக்குள் கஜா புயல் வேகம் பல மடங்கு பெருகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையொட்டி, சென்னையிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும்போது 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. சில இடங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கஜா புயல் காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்க்பட்டு உள்ளது.

கஜா புயலை எதிர் கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 15 படைகள் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீர், மின்சார சப்ளையை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். நாளை இரவு புயால் தொலை தொடர்பு துண்டிக்கப்படலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் கஜா புயல் மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த புயல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கடலூர் மாவட்ட  சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோனை கூட்டம் நடந்தது.  பின்னர் பேசிய ககன் தீப் சிங் பேடி, கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாராட்டினார். கடலூர் மாவட்ட மக்கள் 2,3 நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். காற்று வேகமாக வீசினால் மின்கம்பங்கள்  சாயலாம் என்பதால் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளுங்கள்  கஜா புயலை எதிர்கொள்ள பொதுப்பணித்துறை மூலமாக ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 

இதுகுறித்து, ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் கூறுகையில், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுக்கபட்டு உள்ளது என்றார்.

click me!