காதல் திருமணமா..? வேறு எங்கு போவது..? காவல் நிலையத்தில் புதிய அறிக்கை..!

By thenmozhi gFirst Published Nov 13, 2018, 5:04 PM IST
Highlights

கரூர் மாவட்டம் அனைத்து மகளிர் நிலைய, காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்ட ஒரு அறிக்கையை காவல் நிலையத்தில் ஒட்டி வைத்துள்ள சம்பவம் அனைவரையும்  கேள்வி கேட்க வைத்து உள்ளது.

கரூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் , காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்ட ஒரு அறிக்கையை சுவற்றில்  ஒட்டி வைத்துள்ள சம்பவம் அனைவரையும்  கேள்வி கேட்க வைத்து உள்ளது.
 
அதாவது, வீட்டை மீறி காதல் திருமணம் செய்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பாக இதுவரை மகளிர் காவல் நிலையத்தில் பொறுமையாக விசாரித்து அதற்கான தீர்ப்பு காணப்பட்டு வந்தது. மேலும் பெரும் பிரச்சனை நடுவே திருமணம் செய்துக்கொள்ளும் காதல் ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தை அணுகுவது உண்டு.

இந்த நிலையில், கரூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுதி ஒட்டப்பட்டு உள்ள அறிக்கையில், "காதல் திருமணம் செய்துக்கொண்டு வரும் புகார் மனுக்கள் சம்மந்தமாக இங்கு விசாரணை நடத்தப்பட மாட்டாது" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மேலதிகாரியிடம் கேட்டதற்கு, அந்தந்த பகுதி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்திலேயே இனி இது போன்ற புகார்கள் விசாரிக்கப்படும் என தெரிவித்து உள்ளனர். ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் எப்போதும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை செய்யும் போது, காதல் விவகாரம் பற்றி பொறுமையாக விசாரிக்க முடியாத சூழல் தான் நிலவும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.மேலும் இது போன்ற காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை வரும் போது வேறு  எங்கு செல்ல முடியும் என கேள்வி எழுந்துள்ளது.

click me!