தமிழகத்தில் தாராளமாக புழங்கும் குட்கா... குடோனில் பதுக்கிய 712 கிலோ பறிமுதல்

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 2:46 PM IST
Highlights

சென்னை வடபழனியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்த 712 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதனை பதுக்கி வைத்த உரிமையாளரை கைது செய்தனர்.

சென்னை வடபழனியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்த 712 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதனை பதுக்கி வைத்த உரிமையாளரை கைது செய்தனர்.

சென்னை வடபழனி சிவன்கோவில் தெருவில் ஒரு கிடங்கில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக அசோக் நகர்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது, அங்குள்ள ஒரு குடோனில் பண்டல் பண்டலாக பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதனை பிரித்து பார்த்தபோது பான்பராக், ஹான்ஸ், மானிக் சந்த் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 712 கிலோ இருந்தன. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனை வாடகைக்கு நடத்தி வரும் அப்துல்ரகுமான் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், வடமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து அவர் எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக இருப்பத யார், எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

click me!