தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்! யார் இவர்?

Published : Aug 31, 2025, 04:34 PM IST
Tamilnadu

சுருக்கம்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? என்பது குறித்து பார்ப்போம்.

G Venkataraman Is New Tamil Nadu DGP! தமிழகத்தின் டிஜிபியாக இருந்து வந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். இவர் ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் கசிந்தவுடனேயே தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? என்ற கேள்விகள் எழத் தொடங்கின. இந்நிலையில், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி தேர்வு முறையை பொறுத்தவரை மாநில அரசு தகுதிவாயந்த 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கும்.

தமிழகத்தின் புதிய டிஜிபி வெங்கட்ராமன்

அதில் 3 பேரை செலக்ட் செய்து மத்திய அரசு மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக தேர்வு செய்யும். இந்த நடைமுறையின்படி தமிழக அரசு சீமா அகர்வால், ஜி.வெங்கட்ராமன், சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்தது. மத்திய அரசின் பரிந்துரை பட்டியல் இன்னும் வராத நிலையில், வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. வெங்கட்ராமன் டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில், இப்போது பொறுப்பு டிஜிபியாகி உள்ளார்.

யார் இந்த வெங்கட்ராமன்?

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கட்ராமன், 1994ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர் காவல் துறையில் சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2001ல் சிபிஐயில் சென்னை எஸ்பியாக பணியாற்றிய வெங்கட்ராமன் 2008ல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2009ல் தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட அவர் 2008ல் ஐஜியாக பதவி உயர்வு அடைந்தார்.

நிரந்த பதவி கிடைக்குமா?

இதன்பிறகு 2019ல் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர் 2024ல் சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார. தனது திறமையான பணியின் காரணமாக இப்போது டிஜிபி பொறுப்பு தேடி வந்துள்ளது. இப்போது பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள வெங்கட்ராமன், பதவிக்காலம் முடியும் வரையிலான நிரந்தர‌ டிஜிபியாக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!