ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் 4வதுநாளாக இன்றும் 'ரெய்டு' நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை
தென் மாநிலங்களில் ரியல் எஸ்டேட் மூலம் கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்து வருவதில் ஜி ஸ்கொயர் நிறுவனம் முன்னனியில் உள்ளது. இந்த கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் வருமான வரித்துறையின் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் அலுவலகத்திலும் நேற்று முன்தினம் சோதனை தொடங்கியது. இந்த சோதனையில் திமுக எம்எல்ஏ அண்ணாநகர் மோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அண்ணாமலைக்கு தடை விதியுங்கள்..! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்த காங்கிரஸ்
சென்னையில் தொடரும் சோதனை
ஆண்டுக்கு 56 கோடி ரூபாய் வருமான ஈட்டி வந்த ஜி ஸ்கொயர் நிறுவனம், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அதன் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் தெருவில் அமைந்துள்ள சுபாஷ் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனையானது நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது. இதே போல் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி ஸ்கொயர் நிர்வாகி ஸ்ரீப்ரியா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னையில் மீதமுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளது.
முக்கிய ஆவணங்கள் ஆய்வு
இதே போல கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு மூன்று நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று நான்காவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், மூன்று வருடத்தில் நடந்த பத்திரப்பதிவுகள் மற்றும் வங்கி பணபரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை 4வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறதா, வரவு செலவு கணக்குகள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்