
புதுச்சேரியில் இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வு, பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து புதுச்சேரியில் மார்ச் 29ஆம் தேதி எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு புறகணித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தனியார்மயம் நடவடிக்கை , தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், ஏழை குடும்பத்திற்கு நிவாரணம் 7500 வழங்க வேண்டும், மின்சார துறை தனியார்மயம் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் விலைவாசி உயர்வு, பொதுத்துறை தனியார்மயமாக்குவதை கண்டித்து புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி முழு போராட்டம் நடத்த போவதாக எதிர் கட்சிகள் அறிவித்துள்ளன. புதுச்சேரி மாநிலத்தினை மத்திய பாஜக அரசு புறக்கணித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. மார்ச் 29ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதுடன், அன்றைய தினத்தில் பதினோரு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தி , அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, போராட்டத்தை சிறப்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சர்ச்சையான டெண்டர்.. திடீர் மாற்றப்பட்ட நிபந்தனை.. இனி அசைவ உணவும் வழங்கப்படும் என அறிவிப்பு..