நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு….தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : May 27, 2017, 07:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு….தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு…

சுருக்கம்

From tommorrow Ramzan fasting....Haji salaudeen Mohammed Ayoob

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் தென்படாததால் ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியை நோன்பின் முதல் நாளாக கருதலாம் என்றும் , அந்த வகையில் இஸ்லாமியர்கள் நாளை ரம்ஜான் நோன்பைத் தொடங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று.

தமிழகத்தில் நேற்று  பிறை தென்படவில்லை என்பதால் நாளை முதல்  நோன்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகத்தில் உள்ள  அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை இன்று முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்,
 

 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!