சூடு பிடிக்கிறது அரசு கேபிள் டிவி...!! அனைவருக்கும் இலவச செட் டாப் பாக்ஸ் - அமைச்சர் மணிகண்டன் அதிரடி

 
Published : Jul 03, 2017, 04:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
சூடு பிடிக்கிறது அரசு கேபிள் டிவி...!! அனைவருக்கும் இலவச செட் டாப் பாக்ஸ் - அமைச்சர் மணிகண்டன் அதிரடி

சுருக்கம்

free set top box for TN peops says minister manikandan

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவில் இலவச செட்டாப்பாக்ஸ் வழங்கப்படும் என்று தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டதால் விரைவில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

நமது அரசு இணையதளம் உருவாக்கப்படும் என்றும், இதனால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவு மேலும் வளர்த்திட உதவும் என்றார்.

மக்கள் தங்கள் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளம் செயல்படும். ரூ.2.10 கோடியில் நமது அரசு இணையதளம் உருவாக்கப்படும் என்றார். 

ரூ.88.37 கோடி செலவில் கணினி கல்வி இல்லாத கிராம மக்களுக்கு 26.79 லட்சம் கிராம மக்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார். 

பிரதமரின் கணினி பயிற்சி திட்டத்தின் ஓர் அங்கமான இந்த திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார்.

நவீன தமிழ் உரைக்கான சிறந்த இலக்கணச் சரிபார்ப்பு மென்பொருள் உருவாக்கப்படும் என்றும் கணினி வழி கற்றலில் உள்ள ஐயப்பாடுகளை தீர்வு செய்ய இந்த மென்பொருள் உதவும் என்று தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்! பொங்கியெழுந்த இபிஎஸ்!
நாத்திகத்தை கக்கத்தில் போட்டு... ஆத்திகத்தில் கரைந்த திராவிடமாடல் கொள்கை..! ஆண்டாள் வேடமிட்ட திமுக எம்பி., தமிழச்சி..!