அலர்ட் !! நாளை மறுநாள் சென்னையில் இலவச வேலைவாய்ப்பு முகாம்.. தெரிந்துக் கொள்ள வேண்டியவை..

By Thanalakshmi V  |  First Published Oct 26, 2022, 5:46 PM IST

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் 28 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாமினை நடத்த  உள்ளன. இதில் 8 , 10, 12, ஐ.டி.ஐ , டிப்ளமோ, டிகிரி ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி  நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வரும் 28 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாமினை நடத்த  உள்ளன.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! CAT Exam 2022 அனுமதி சீட்டு நாளை வெளியீடு.. வெளியான முக்கிய தகவல்..
             
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில்  8- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு,  12- ஆம் வகுப்பு,  ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.  இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இந்திய ராணுவத்தில் Head Constable பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிக்கலாம்..?
 

click me!