நல்ல செய்தி.. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published May 14, 2022, 8:10 PM IST
Highlights

2021-2022 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அரசு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 6 லட்சம் மாணவ- மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள்‌ 3 மாதத்தில்‌ வழங்கப்படும்‌ என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்‌, 2021-2022-ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அரசு, அரசு உதவிப்பெறும்‌ மற்றும்‌ பகுதியாக நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 11-ம்‌ வகுப்பு பயிலும்‌ அனைத்து வகுப்பைச்‌ சார்ந்த மாணவ - மாணவியர்கள்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ தொழிற்பயிற்சி பயிலும்‌ மாணவ - மாணவியர்கள்‌ ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள்‌ கொள்முதல்‌ செய்ய 03.03.2022 அன்று ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.

ஒப்பந்தத்தில்‌ தகுதியான மிதிவண்டிகள்‌ உற்பத்தியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌. ஒப்பந்தத்தில்‌ கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின்‌ விலைப்‌ புள்ளிகள்‌ திறக்கப்பட்டு, கொள்முதல்‌ குழு மூலம்‌ விலை குறைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கொள்முதல்‌ குழுவால்‌ விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில்‌ 6,18,101 மிதிவண்டிகள்‌ கொள்முதல்‌ செய்து 3 மாத காலத்திற்குள்‌ மாணவ - மாணவியர்க்கு வழங்கப்படும்‌ என்று அதில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜெயலலிதாவை போல நல்லாட்சி தருவேன் என்று சொல்லும் சசிகலா.. ஒரே வார்த்தையில் ஓ. பன்னீர்செல்வம் சொன்ன நச் பதில்!

click me!