
வாழப்பாடி
சேலத்தில் சாலையக் கடக்கும்போது டிராக்டர் மீது கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பெருமாபாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவர் தனது டிராக்டரில் வாழப்பாடியில் இருந்து சிமெண்ட், செங்கல் ஏற்றிக் கொண்டு ஏத்தாப்பூர் நோக்கி நேற்றிரவு 11 மணிக்குச் சென்றார்.
சேலம் - சென்னை பைபாஸ் சாலையில் வைத்தியகவுண்டம்புதூர் பிரிவு சாலையில், சாலையைக் கடந்து சென்றபோது, சென்னையில் இருந்து சேலத்துக்கு ஒரு கார் வந்தது.
நொடிப்பொழுதில் அந்த கார், டிராக்டரின் மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. இதில், காருக்குள் இருந்த 4 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
டிராக்டரில் வந்த தனபாலுக்கு காயங்களுடன் உயிர்தப்பினார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் வந்து சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், விபத்தில் இறந்தவர்களில் காரை ஓட்டி வந்த முருகன் (41) சேலம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே பைனான்ஸ் நடத்தி வருகிறார். அவருடன் தந்தை நடராஜன் (59), மைத்துனர்கள் சீனிவாசன் (31), ரமேஷ் (33) ஆகியோர் என தெரிய வந்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.