யார் இந்த சேடப்பட்டி முத்தையா...? அதிமுகவில் இருந்து திமுக வந்தது ஏன்..?

By Ajmal Khan  |  First Published Sep 21, 2022, 2:05 PM IST

அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சேடப்பட்டி முத்தையா, கடந்த 2006 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலை மதுரையில் காலமானார்
 


சேடப்பட்டி முத்தையா காலமானார்

சேடப்பட்டி முத்தையா 1945 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள  முத்தப்பன் பட்டியில் பிறந்தார். 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை  அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார். 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சபாநாயகராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சேடப்பட்டி முத்தையா, அதிமுக பொருளாளராகவும் இருந்தார். இதனையடுத்து பெரியகுளம் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பிலும் இருந்தார்.

Tap to resize

Latest Videos

முன்னாள் எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை...! அலார்ட் ஆகும் அரசியல் கட்சிகள்

ஜெயலலிதாவுடன் மோதல்

இதனிடையே 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா  திரும்ப பெற்றார். அப்போது நடைபெற்ற நப்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் சேடப்பட்டி முத்தையா வாக்களிக்கவில்லை, இதன் காரணமாக ஜெயலலிதாவிற்கும் சேடப்பட்டி முத்தையாவிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சில காலம் சேடப்பட்டி முத்தையாவை ஜெயலலிதா ஒதுக்கிவைத்திருந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது  நிதியுதவி செய்யுமாறும் ஜெயலலிதாவுக்கு சேடப்பட்டி முத்தையா கடிதம் அனுப்பினர். அந்தக் கடிதத்திற்குப் பதிலும் வரவில்லை, உதவியும் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், நான் உயிருடன் இருக்கிறேனா? இல்லையா? என்று நினைத்து பார்க்காத கடைசியில் இருப்பது தனக்கு இழுக்கு என கூறி 
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் 2006 ஆம் ஆண்டு இணைத்துக்கொண்டார்.

வழக்குப் போடுங்கள் காத்திருக்கிறேன்..! மநுஸ்மிருதியை படித்து காட்டி தோலுரிப்பேன்- பாஜகவை அலறவிட்ட ஆ.ராசா

திமுகவில் இணைந்த சேடப்பட்டி முத்தையா

இதனிடையே கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை தொடர்பாக நேரில் கேட்டறிந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி  சேடப்பட்டி முத்தையா (77) உயிரிழந்தார். சேடப்பட்டி முத்தையாவின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா எனும் மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

click me!