APJ Abdul Kalam Death Anniversary: ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று!

By Raghupati R  |  First Published Jul 27, 2024, 1:15 PM IST

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.


முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையி, அவரை பற்றி விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டின் கடைக்கோடியான இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ஜைனுலாபுதீன் - ஆஷியம்மா தம்பதியினரின் 5 ஆவது மகனாகப் பிறந்தார்.

ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏபிஜே  ஆகும். மீனவ தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதில் வறுமையின் பின்னணியில் வளர்ந்தார். சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு மேல்நிலை கல்வியினை தொடர்ந்த அப்துல் கலாம், 1955 இல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்து முடித்தார்.

Tap to resize

Latest Videos

இவருக்கு விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது அதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவர் 9 ஆவது இடத்தையும் பிடித்தார். ஆனால் அப்துல் கலாமுக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 1960 இல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.

இருப்பினும் பிறகு இஸ்ரோவில் இணைந்து செயல்பட துவங்கினார். செயற்கை கோளான எஸ்.எஸ்.வி 3 ஏவுவதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசன் விருதை அப்துல் கலாமுக்கு 1981 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1963 தொடக்கம் முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினார்.

பிறகு 1999 இல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்த அவர், அக்னி பிரித்வி ஆகாஷ் எனப்படும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். யாரும் எதிர்பார்த்த வகையில் 2002 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவர் ஆனார்.

2007ஆம் ஆண்டு அவரது பதவிக் காலம் முடிந்தது மீண்டும் இந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றார். எனினும் பல்வேறு காரணங்களால் அந்த போட்டியில் இருந்து விலகினார். ஏவுகணை நாயகன், கனவு நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அப்துல் கலாம் உலகெங்கிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்களால் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?

click me!