மழையால் சேதமடைந்த 5000 நெல் மூட்டைகள்...! கண்டுகொள்ளாத அமைச்சர்கள்..சீறிய ஆர்.பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Aug 4, 2022, 2:36 PM IST
Highlights

 மதுரை கப்பலூரில் உள்ள நெல் இருப்பு வைக்கப்படும் இடத்தில் சரியான தார்பாய்கள் இல்லாத காரணத்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தொடரும் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இத்ன காரணமாக மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதாக அதிமுக சார்பாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தநிலையில் மதுரை கப்பலூரில் உள்ள நெல் இருப்பு வைக்கும் இடமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் மழையால் நனைந்து வரும் நெல் மூட்டைகளை தமிழக எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக மதுரை,நாகப்பட்டினம்,தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் சொத்தாக விளங்குகிற நெல் மணிகளை பாதுகாக்க  திமுக அரசு தவறிவிட்டதாக தெரிவித்தார்.  எனவே இந்த உண்மை நிலையை அறிய நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.  

நெல் மூட்டைகள் பாதிப்பு

திண்டுக்கல்லில் இருக்கும் உணவுத்துறை அமைச்சருக்கு மதுரை திருமங்கலம் கப்பலூரில் உள்ள அந்த தமிழ்நாடு வாணிபொருள் கிடங்கில் எவ்வளவு நெல் மூட்டைகள் மழையால் நனைந்துள்ளது பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க ஒரு மணி நேரம் கூட ஆகாது வந்து பார்த்து செல்லலாம், ஆனால்  புள்ளி விவரங்கள் இல்லாமல் அமைச்சர் அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார். நெல் இருப்பு வைக்கப்படும் இடங்களில் நெல் மணிகள் நனைந்து  முளைத்து வருகிறது இதனால் விவசாயிகள் பாதிப்படைகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரைத்த மாவையே அழைக்கிறார், மாவு புளித்து விடும் என பதில் தருவது ஜனநாயக மரபு அல்ல, எதிர்க்கட்சியினர் ஆகிய நாங்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நேரடியாக வந்து நெல் இருப்பு வைக்கப்படும் இடங்களை பார்வையிட்டு  மழையால் நனைந்து நெல்கள் முளைத்து விவசாயிகள் பாதிக்கப்படுவதை நேரில் பார்த்து தான் கூறுகிறோம். அதற்கு புள்ளி விவரங்கள் இல்லாமல்  பதில் தருவது ஏற்புடையதல்ல எனவும்  கூறினார்.  தொடர்ந்து மழை பெய்து வருகிறது ஆனால் தமிழகத்தில்  தி.மு.க. அரசின் பாதுகாப்பின்மை காரணமாக 5000 நெல் மூட்டைகளுக்கு மேல் மழையால் நனைந்து நெல்கள் முளைத்து  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...! மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் அவசர ஆலோசனை

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 தமிழக முழுவதும் உள்ள அனைத்து நெல் கொள்முதல் மையங்களிலும்  இதே போன்ற நிலை தான் உள்ளதாக தெரிவித்தார். விவசாயத் துறையில் சார்பில் 5 கோடி மதிப்பில் 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள் ஆனால் எந்த விவசாயிக்கு தந்தார்கள் என்றே தெரியவில்லை.  மதுரை கப்பலூர் அருகில் உள்ள சேமிப்பு கிடங்கிலே கிட்டத்தட்ட 5 லட்சம் மூட்டைகளுக்கு  மேலாக சேமித்து வைக்கப்படுகிறது.  இங்கு திறந்தவெளியில் சேமிப்பு கிடங்கு இருப்பதாலும் மழையில் நனைவதாலும் நெல் மூட்டைகள் நனைந்து நெல்மணிகள் முளைத்து பயனற்ற வகையில் காணப்படுகிறது.  இது விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.


இதையும் படியுங்கள்

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்.. அருவிகளில் குளிக்க 3 வது நாளாக தடை..

click me!