தினமும் 5.4 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்னும் பூனை குடித்து விடுகிறது...! திமுகவை கலாய்த்த ஜெயக்குமார்

By Ajmal KhanFirst Published Aug 3, 2022, 2:51 PM IST
Highlights

விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் திமுகவின் பாரம்பரியத்தில் வந்த  அமைச்சர் நாசரும் ஆவின் பாலில் எடையை குறைத்து விஞ்ஞான ஊழலில் தொடர்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.

ஆவின் பால் எடை குறைந்தது ஏன்.?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தினந்தோறும்  அத்தியாவசிய தேவையான பொருளாக பால் உள்ளது. அந்தவகையில் ஆவின் பாலில் அரை லிட்டரில் குறைவான அளவில் இருப்பதாக தொடர்ந்து கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் நேற்று சமூக வலை தளத்தில் அரை லிட்டர் ஆவின் பாலின் அளவு  430 கிராம் மட்டுமே இருந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக 500 மி.லி. பால் பாக்கெட்டின் அளவை கிராமில் கணக்கிடும்போது 515  கிராம் இருக்க வேண்டுமென்றும், ஆனால்  1/2 லிட்டர் பாலின் எடை 430 மில்லி கிராம் மட்டுமே இருந்தது பொதுமக்களை அதிர்ச்சசி அடையவைத்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து இருந்தனர்.

சீமானுக்கு வாய்க்கொழுப்பு அதிகம்.!அதிமுகவிடம் காட்டினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம்-ஜெயக்குமார்

விசாரணை நடத்தும் ஆவின் நிர்வாகம்

இது தொடர்பாக விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம் ஒரு பாக்கெட்டில் மட்டும் தவறு நடைபெற்று விட்டதாகவும் அந்த பால் பாக்கெட் மாற்றப்பட்டு வேறொரு பாக்கெட் வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை படத்திற்கு அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

5 ஜி அலைக்கற்றையில் மிகப்பெரிய ஊழல்..!பாஜக அரசு விசாரணை நடத்தவில்லையென்றால்..! அடுத்த அரசு விசாரிக்கும்-ஆ.ராசா

5.4 லட்சம் லிட்டர் பாலை குடிக்கும் நாசர்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஆவின் மூலமாக தினமும் 33லட்சம் லிட்டர் அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 5.5 லட்சம் லிட்டர் பாலை தினமும் நாசர் என்ற பூனை குடித்துவிட்டது, இதன் மூலம் தினமும் 2.4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு, ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் ஆவின் பாலில் இருந்து ஆதாயம் தேடி அமைச்சர் நாசர் ஆதாயம் தேடி வருவதாக குற்றம்சாட்டினார். வருகிறார். ஆவின் பால் எடை குறைந்தது தொடர்பாக விசாரணை நடைபெறும் என அமைச்சர் நாசர் தெரிவிக்கிறார். ஆனால் துறை ரீதியான விசாரணையில் நியாயம் கிடைக்காது என தெரிவித்தார். மக்களுக்கு வழங்கும் பாலில் முறைகேட்டில் ஈடுபடும் அரசு தான் திமுக அரசு என விமர்சித்த ஜெயக்குமார்  விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் திமுகவின் பாரம்பரியத்தில் வந்த  அமைச்சர் நாசரும் விஞ்ஞான ஊழலில் தொடர்கிறார் என ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.


அதிமுக பொதுக்குழு வழக்கு.. இந்த ஜட்ஜ் வேண்டாம்.. வேறு ஜட்ஜை கோரும் ஓபிஎஸ் தரப்பு.!

click me!