
அதிமுகவை சேர்ந்த தமிழ்மொழி இராஜதத்தன் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவியை வகித்து வந்தார். பின்னர் அதிமுகவின் செயற்குழு உறுப்பினராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் பிரிவின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
பின்னர் 2001 சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்மொழி இராஜதத்தன் சுமார் 20,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஞானசேகரனை தோற்கடித்தார். அதேபோல் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட தமிழ்மொழி இராஜதத்தன் பாமகவை சேர்ந்த செந்தமிழ் செல்வனனிடம் 11,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க: மகன் அன்புமணியை வெளியே போகச் சொல்லும் அளவுக்கு முகுந்தனுக்கு முக்கியத்துவம்! யார் இவர் தெரியுமா?
இந்நலையில் தமிழ்மொழி ராஜதத்தன் கடந்த 2014ம் ஆண்டு செங்கல்பட்டு அருகே நடந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். அன்று முதல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அதிமுக செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட எந்த கட்சியில் பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
இதையும் படிங்க: புதுமை பெண் திட்டம்! லட்டு மாதிரி வந்த சூப்பர் அறிவிப்பு! குஷியில் மாணவிகள்!
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மொழி இராஜதத்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். இவரது மறைவு தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்மொழி இராஜதத்தன் மக்களை எளிதில் அணுகக்கூடியவர். இவரது மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.