ரூ.19 கோடி மோசடி வழக்கு - சுகேஷ் சந்திராவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு!!

First Published Jun 9, 2017, 12:02 PM IST
Highlights
forgery case sukesh chandra


திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திராவை, ரூ.19 கோடி மோசடி செய்த வழக்கில், கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதற்கு இடை தரகராக செயல்பட்டதாக சுகேஷ் சந்திரா உள்பட 4 பேரை டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த ராஜவேலு என்பவரிடம், அரசு ஆணை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவர் திகார் சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே, தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.19 கோடி மோசடி செய்ததாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், வரும் 23ம் தேதி சிபிஐ கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரா மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்து வெளியாகி வருவதால், அவரை தமிழக சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது திகார் சிறையிலேயே வைக்கப்படுவாரா என சட்ட நிபுணகர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!