துணிச்சலான பணிக்காக தமிழக அரசின் விருது பெற்ற பிரபல வன கால்நடை மருத்துவர் தற்கொலை! நடந்தது என்ன?

By vinoth kumarFirst Published Aug 22, 2024, 7:59 AM IST
Highlights

தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருதை பெற்ற  வன கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரகாஷ், தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிஞ்சியை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் ஓசூரில் வன கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மனைவி கவிதாவை (37) 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருநெல்வேலி மாவட்ட பத்திரப்பதிவுத்துறை பதிவாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகள் உள்ளார். மனைவி மற்றும் மகள் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர். பிரகாஷ் மட்டும் ஓசூர் மாருதி நகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று  காலை வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ், மனைவி கவிதாவிற்கு போன் செய்து பேசிவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனே அப்பார்ட்மென்ட் உரிமையாளருக்கு தெரிவித்தார்.

Latest Videos

இதையும் படிங்க: School Colleges Holiday: ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!

உடனே சென்று பார்த்த போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகாஷ்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க:  Power Shutdown in Chennai: சென்னை மக்களே முக்கிய செய்தி.. இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பிரகாஷ், வனப்பகுதியில் இறக்கும் யானை மற்றும் பிற விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்வது, காயமடையும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை திறன்பட செய்து வந்தார். தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருதை பெற்றவர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!