ஓவிய பிரஷ்களுக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான கீரிப்பிள்ளைகள்..! வனத்துறை அதிகாரி சுப்ரியா சாஹு பகீர் தகவல்

Published : Aug 27, 2023, 01:51 PM IST
ஓவிய பிரஷ்களுக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான கீரிப்பிள்ளைகள்..! வனத்துறை அதிகாரி சுப்ரியா சாஹு பகீர் தகவல்

சுருக்கம்

ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் பிரஷ்கள் தயாரிக்க கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு வலியுறுத்தியுள்ளார்.

ஒரு கிலோ முடிக்காக 50 கீரிகள் கொலை

யானைகள் தந்தத்திற்காகவும், புலிகள் தோலுக்காவும், மான்கள் கொம்புக்காகவும் கொல்லப்பட்ட சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெயிண்டிங் பிரஸ்களுக்காக கீரிப்பிள்ளை கொல்லப்படுவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி கீரிகளை கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் பிரஷ்கள் தயாரிக்க கீரிப்பிள்ளையின் முடிகள் பயன்படுத்தப்படுவதால் கீரிப்பிள்ளைகள் பெருமளவில் கொல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவது தடுக்கனும்

ஒரு கிலோ கீரி முடியை சேகரிக்க கிட்டத்தட்ட 50 கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதாக தெரிவித்துள்ள அவர், சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ள, தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினர் கோவை மண்டலத்தில் இருந்து 3200 பெயிண்ட் பிரஷ்களும்,

 

சென்னை மண்டலத்தில் இருந்து 7800 பிரஷ்களும், மதுரை மண்டலத்தில் இருந்து 3000 பிரஷ்களும் பறிமுதல் செய்துள்ளதை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். ஓவியர்கள் சிந்தெடிக் பிரஷ்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்\

மதுரை ரயில் விபத்து சம்பவம்.! தப்பி ஓடிய 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்- ரகசிய இடத்தில் விசாரணை

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?