சென்னைக்கு விடை கொடுத்த வெளியூர் வாசிகள்;

First Published Dec 24, 2016, 9:07 AM IST
Highlights


கிருஷ்ணகிரி,

சென்னையில் இருந்த வெளியூர் வாசிகள், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னைக்கு விடைக் கொடுத்துவிட்டு விடுமுறையை உறவுகளுடன் கழிக்க தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று இரவு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஏராளமான கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பிராயணத்தைத் தொடங்கிவிட்டனர்.

இதனால், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் எறும்புகளைப் போல அணிவகுத்து நின்று இருந்தன.

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சுங்கச்சாவடியில் காத்திருந்தன.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளதால் பலரும் விடுமுறைக்காக தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல இருந்தவர்களும் இந்த வரிசையில் அடங்குவர்.

இதன் காரணமாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்றன. ஒவ்வொரு வாகனமும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் எடுத்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் உள்ளூர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் கட்டணமில்லாமல் செல்வதற்கு வசதியாக தனியாக பாதை உள்ளது. அந்த பாதைகளிலும் ஏராளமான கார்கள், லாரிகள் நேற்று நின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் சிரமம் அடைந்தனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் நடைமேடையின் மீது மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்று சாகசம் செய்தார்கள்.

நேற்று காலை முதல் மதியம் வரை இதே நிலைதான் காணப்பட்டது. அதே போல மாலை மீண்டும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

 

click me!