Chennai Rains : சென்னை மக்களே உஷார்... 'மீண்டும்' கனமழை பெய்ய வாய்ப்பு..மறுபடியும் முதல்ல இருந்தா ?

By Raghupati RFirst Published Dec 31, 2021, 8:20 AM IST
Highlights

அடுத்த 3 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று லேசான மழை பெய்ய தொடங்கிய நிலையில்  மதியம் 2 மணியளவில் மழை தீவிரமடைய ஆரம்பித்தது.  இதனால் அடுத்த சில மணிநேரங்களில் பெய்த திடீர் மழையின் காரணமாக திடீர் மழையால் சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அலுவலகத்தில் இருந்து பலரும் வீட்டுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

அதேசமயம் நகர் முழுவதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சென்னையின் பிரதான சாலையான  அண்ணா சாலையில் வாகனங்கள் நகரமுடியாமல் மணிக்கணக்கில் ஸ்தம்பித்து போனது.  கெங்குரெட்டி, ரெங்கநாதன், ஆர்பிஐ, மேட்லி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. 

இதனால் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வெளுத்து வாங்கியது.

இந்நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழை தொடரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

click me!