
திருவண்ணாமலை
போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருசில இடங்களில் தொடங்கிய இந்தப் போராட்டம் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களில் தமிழகத்தின் ஒட்டுமொத்த இடத்திலும் போராட்டம் வலுப்பெற்றது.
அதேபோன்று, திருவண்ணாமலையிலும் கடந்த 14–ந் தேதி மாலை 6 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒருசில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிகளவு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்தனர். 9 மணி முதல் குறிப்பிட்ட இடைவெளியில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதனால் பாதிப்பே மிஞ்சியது. ஏனெனில், ஓட்டியவர்கள் தற்காலிக ஓட்டுநர்கள்.
தற்காலிக ஓட்டுநர் ஒருவர் அரசு பேருந்து ஓட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் இந்த இரு நாளில் நடந்துள்ளது.
இந்த போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்ட தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்து லாபம் பார்த்தனர்.
அண்ணா தொழிற்சங்க தொழிலாளர் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்து பேருந்தை இயக்கினர். ஆளும் கட்சியின் தொழிற்சங்கமாக இருந்துகொண்டு இதைகூட செய்யவில்லை என்றால் எப்படி?
தனியார் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களும் அரசு பேருந்தை இயக்கினர். சென்னை, வேலூர் பகுதிகளுக்கு திருவண்ணாமலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் விழுப்புரம், திருச்சி, மதுரை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் கணிசமாகவே இருந்தது.
விழுப்புரத்துக்கு தனியார் பேருந்துகள் மட்டுமே அதிகளவு இயக்கப்பட்டு கொள்ளை லாபம் பார்த்திருப்பர்.
திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பயணிகள் பேருந்து வரும் வரும் என்று காத்திருந்து நம்பிக்கை இழந்தது மட்டுமே மிச்சம்.
அமைச்சர்கள் தொலைக்காட்சியில் கம்பீரமாக பேட்டிக் கொடுத்துபோல தனியார் பள்ளி, கல்லூரி ஓட்டுநர்களை வைத்து 100 சதவீதம் பேருந்துகளை இயக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் மிகவும் குறைந்தளவிலேயே அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகள் இயங்கின. இதில், கட்டணக் கொள்ளை வேறு. கடைசியில் அவதிக்குள்ளானது என்னமோ பயணிகள்தான்.
இரண்டு நாள்களுக்கு இப்படின்னா? ஒரு வாரம் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த்அம் செய்திருந்தால்…