Mukkombu: நிரம்பி வழியும் மேட்டூரில் இருந்து முக்கொம்பிற்கு பொங்கிவரும் காவிரி.!எத்தனை அடி வருகிறது தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Aug 2, 2024, 1:20 PM IST
Highlights

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், முக்கொம்பிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக நீர் வந்து சேர்ந்தது. இந்தநிலையில் முக்கொம்பிற்கு ஒரு லட்சத்து 68ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் கொள்ளிடத்தில் 1.25ஆயிரம் கன அடி நீரும், காவிரியில் 43ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிடு, கிடுவென உயர்ந்த மேட்டூர் அணை

விவசாயிகளின் முக்கிய நம்பிக்கையாக இருப்பது காவிரி ஆறாகும். கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி பல மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழக எல்லையான ஒகேனக்கல்லில் இருந்து தருமபுரி, சேலம் வழியாக மேட்டூரை வந்தடைகிறது. இங்கிருந்து திறக்கப்படும் நீர் 12 மாவட்டங்களில் பாசன வசதியை பெறும், மேலும் பல மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

Latest Videos

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணை கடந்த 20 நாட்களுக்கு முன்பாக 40 அடி மட்டுமே நீர் மட்டம் இருந்தது. இதனால் விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது தான் கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிந்தது. 

முக்கொம்பு அணை நீர் வரத்து

இதனையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடக வேறு வழியில்லாமல் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரே நாளில் இரண்டு லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. 10 நாட்களில் தனது முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

நேற்று வரை 1.70லட்சம் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1.50 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் முக்கொம்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு வரை குறைவாக வந்த தண்ணீர் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் மேட்டூரில் இருந்து முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 1,68,000 கனஅடியாக இருந்தது, இதில் காவிரியில் 43,874 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,25,000 கனஅடியும் திறந்துவிடப்பட்டது.

click me!