
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பொதுத் தேர்வு எழுதிய சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து கல்வியை கம்பிக்குள் அடைத்து வைக்க முடியாது என்று காட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை சீர்திருத்தப் பள்ளியில், பல்வேறு தவறுகள் செய்தவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் இளைஞர்கள் ஐந்து பேர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவருமே பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து அசத்தியுள்ளனர்.
அவர்கள் மதிப்பெண் விவரங்கள்:
மு.கார்த்திக் 1200-க்கு 992 மதிப்பெண்ணும்,
மா. மணிவண்ணன் - 947,
ப. ரஞ்சித்குமார் - 930,
ஏ. ரோபின் - 910,
ஆர். சற்குணம் – 808 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜெயபாரதி, சிறைக் கண்காணிப்பாளர் சி.எஸ். ரவீந்திரன், சிறை மேலாளர் சித்தார்த்தன், முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் தேர்ச்சிப் பெற்ற அனைவரையும் வாழ்த்தினர்