ஒரே நாளில் ஐந்து அரசுப் பேருந்துகள் ஜப்தி - இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் அதிரடி...

 
Published : Nov 18, 2017, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஒரே நாளில் ஐந்து அரசுப் பேருந்துகள் ஜப்தி - இழப்பீடு வழங்காததால் நீதிமன்றம் அதிரடி...

சுருக்கம்

Five buses in jupti in the same day

கிருஷ்ணகிரி

விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்காததால், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் ஐந்து பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளால் நடைப்பெற்ற வெவ்வேறு விபத்துகளில், பெத்தனப்பள்ளியைச் சேர்ந்த செந்தில்குமார், இலண்டன்பேட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஊத்தங்கரையைச்  சேர்ந்த முனியப்பன், இரத்தினசாமி, தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த முனியம்மாள் ஆகிய ஐவர் காயமடைந்தனர்.

விபத்துகளால் பாதிக்கப்பட்ட இந்த ஐவரும் இழப்பீடு வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதனையடுத்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. அதற்கும் சேர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டனர் பாதிக்கப்பட்டோர்.

இதனையடுத்து, அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் கிருஷ்ணகிரிபுறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து அரசுப் பேருந்துகளை பறிமுதல் செய்து நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டுச் சென்றனர்.

ஒரேநாளில் ஐந்து அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு