தம்பியை ஆள்வைத்து அடித்த அண்ணன் உள்பட ஐவர் கைது; முன் விரோதத்தால் சந்தி சிரித்தது உறவு...

 
Published : Feb 01, 2018, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
தம்பியை ஆள்வைத்து அடித்த அண்ணன் உள்பட ஐவர் கைது; முன் விரோதத்தால் சந்தி சிரித்தது உறவு...

சுருக்கம்

Five arrested including brother who beat his younger brother

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் குடும்ப தகராறில் இருந்துவந்த முன் விரோதத்தால் தம்பியை ஆள் வைத்து அடித்த அண்ணன் உள்பட ஐவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன்கள் காளியப்பன் (39), கதிர்வேல் (48). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் காளியப்பனை அவரது அண்ணன் கதிர்வேல் மற்றும் ஆறுமுகம், ராஜ்குமார், ராஜா ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த காளியப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் ஜெயேந்திரசரஸ்வதி வழக்குப்பதிந்து கதிர்வேல், அவரது தம்பிகள் ஆறுமுகம் (38), ராஜ்குமார் (34) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

மேலும், காளியப்பன் தம்பி ராஜ்குமார் மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரை சேர்ந்த விஜயகுமார், செல்வம், மகேந்திரன், தமிழ்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் (32), மகேந்திரன் (36) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தம்பியை ஆள்வைத்து தாக்கிய அண்ணன் மற்றும் உதவியவர்களை கைது செய்து வழக்கு பதிந்தது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!