அமலாக உள்ள மீன்பிடி தடைக்காலம்… ஏப்.15 முதல் குமரி கிழக்கு பகுதியில் மீன்பிடிக்கத் தடை!!

Published : Apr 12, 2022, 09:39 PM IST
அமலாக உள்ள மீன்பிடி தடைக்காலம்… ஏப்.15 முதல் குமரி கிழக்கு பகுதியில் மீன்பிடிக்கத் தடை!!

சுருக்கம்

குமரி கிழக்கு மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் ஜுன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

குமரி கிழக்கு மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் ஜுன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 இன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14 ஆம் தேதி வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் / வழிவலை விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஆண்டு தோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020இன் படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14 ஆம் தேதி வரையிலும் மீனவர்கள் இழுவலை விசைப்படகு அல்லது தூண்டில் / வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி மீன்பிடித் தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்பட்டு மானிய டீசலும் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!
முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!