
வரும் டிச.8ம் தேதி வரை மீன்வர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிக்கையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலின் ஆழ் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
டிசம்பர் 8 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்பகுதி நோக்கி நகர்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் லேசான மழை பெய்யக் கூடும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவின் படி, நெல்லை மாவட்டம் ஆய்க்குடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., மழை பாதிவானது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், நெல்லை மாவட்டம் தென்காசி, சிவகிரி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆகிய இடங்களில் ஒரு செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.