நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்,கர்நாடகாவில் ஒரு பள்ளி பேருந்து திடீரென இன்று தீப்பிடித்து எரிந்தது
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி பகுதியில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில், மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளிப் பேருந்து உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்த 16 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த சம்பவத்தால்,அப்பகிதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.