சென்னையில் வாட்ச் வாங்கப்போறீங்களா...! உஷார்...! பிரபல நிறுவனங்களின் பெயர்களில் டூப்ளிகேட் வாட்சுகள்!

 
Published : Feb 03, 2018, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சென்னையில் வாட்ச் வாங்கப்போறீங்களா...! உஷார்...! பிரபல நிறுவனங்களின் பெயர்களில் டூப்ளிகேட் வாட்சுகள்!

சுருக்கம்

Fake watches in the names of famous companies in Chennai!

சென்னையில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்ட கைக்கடிகாரங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கடிகாரங்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார்கள் வந்தன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத் தொர்ந்து ஜெயராமன் தலைமையில், சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஜெய்குரு தேவ் என்ற வாட்ச் கடையில், ரோலக்ஸ், பர்பெரி, ராடோ, சிட்டிசன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் சில வெளிநாட்டு நிறுவன பெயர்களில் போலியான கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்க வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்த தனிப்படை, போலியான கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தது.

ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், அங்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தனிப்படை கண்டுபிடித்தது. கடையில் இருந்து ஏராளமான போலி கைக்கடிகாரங்களை கண்டுபிடித்த போலீஸ் தனிப்படை, கடைக்கு சொந்தமான குடோனையும் சோதனையிட்டது. 

குடோனில் நடத்திய சோதனையில் 5,200 போலிகைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பு 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனை அடுத்து, ஜெய்குரு தேவ் கடையின் உரிமையாளர் ஜவானாராம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், போலியாக தயாரிக்கப்பட்ட இந்த கைக்கடிகாரங்கள் எங்கு, எப்படி தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணையை சிபிசிஐடி நடத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!