மீன் பிடி துறைமுகத்தில் திடீர் தீ .. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

 
Published : May 11, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
மீன் பிடி துறைமுகத்தில் திடீர் தீ .. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

சுருக்கம்

fire in fishing boats

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு வைக்கப்பட்ட தீயில், 6 படகுகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் 6 மீன் பிடி படகுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததில் துறைமுகமே புகைபடலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.  

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மடமடவென பரவி 6 படகுகளும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களும்  தீயில் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!