கோவில் திருவிழாவில் தீ விபத்து.. பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபரீதம்.. அலறியடித்து ஓடிய மக்கள்..

By Thanalakshmi VFirst Published Jun 9, 2022, 11:40 AM IST
Highlights

மதுரையில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது, தீப்பொறி சிதறி பந்தல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

மதுரை மாநகர் மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனால்பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அப்போது பட்டாசு வெடித்து சிதறியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீப்பொறி பட்டு, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை ஆட்டையை போட வந்த நீங்க தளபதியை பத்தி பேசலாம? விஜய் ரசிகர்கள் ஆத்திரம்.!

தீயானது மளமளவென எரிய தொடங்கியதை அடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பந்தலுடன் 2 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. 

இந்த தீ விபத்து சம்பந்தமாக திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியது.
 

மேலும் படிக்க: பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது.. தலைமை செயலாளர் உத்தரவு..

click me!