பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது.. தலைமை செயலாளர் உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Jun 9, 2022, 11:03 AM IST
Highlights

பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று  தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
 

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு நடைபெற்றது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனிடையே ஜூன் 13 ஆம் தேதி 1 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

பள்ளிகள் திறப்பு:

12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. வரும் ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 9 ஆம் வகுப்பு இறுதித்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் கல்வியாண்டிற்கான காலாண்டு, அரையாண்டு,  பொதுத்தேர்வு தேதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். மேலும் 2022- 23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய அறிவிப்பு:

இந்நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று  தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளார் . அதில் பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது.பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்

மேலும் படிக்க: 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.. கதறிய பெற்றோர்

click me!