பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உட்பட 6 பேர் பலி

 
Published : Mar 11, 2017, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உட்பட 6 பேர் பலி

சுருக்கம்

An explosion in a fireworks factory near Sivakasi 6 people including 3 women died miserable

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெற்றிலையூரணி என்ற இடத்தில்  நாகமல்லி பட்டாசுத் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென விபத்து ஏற்பட்டது. பூச்சட்டி தயாரிக்கும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக  திடீரென தீப்பற்றிக் கொண்டது

இதில் தீ அடுத்தடுத்து பரவியதில் பயங்கர சத்தத்துடன் கட்டடங்கள் வெடித்துச் சிதறின.

இதில் அங்கு வேலை செய்து 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ அஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெடி விபத்தில்  3 அறைகள் இடிந்து தரைமட்டமாயின.இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் வேறு யாரும் சிக்கியிருப்பார்களா என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்த சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த  5 பேர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை கால தொடக்கத்தில் இருந்தே சிவகாசி பகுதியில் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!